ஞானசார தேரருக்கு ஆதரவாக கேள்வி எழுப்பிய அம்பிட்டியே சுமணரத்ன தேரர்

#SriLanka #government #Gnanasara Thero #LANKA4 #Monk #L4
Prasu
1 hour ago
ஞானசார தேரருக்கு ஆதரவாக கேள்வி எழுப்பிய அம்பிட்டியே சுமணரத்ன தேரர்

சரத் பொன்சேகா, ரஞ்சன் ராமநாயக்க போன்றோருக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பை ஏன் ஞானசாருக்கு வழங்க முடியாது என்று அம்பிட்டியே சுமணரத்ன தேரர் கேள்வி எழுப்பினார்.

ஞானசார தேரருக்கு ஆதரவாக பௌத்த பிக்குகள் ஒன்றிணைந்து மேற்கொண்டு வரும் பேரணியில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஞானசார தேரர் இந்த நாட்டுக்காகவும் சிங்கள இனத்திற்காகவும் குரல் கொடுத்தார், அவ்வாறு குரல் கொடுத்ததன் விளைவாக, இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்த ஜனாதிபதியினால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது.

எனினும், அந்த பொதுமன்னிப்புக்கு எதிராக மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு, அவரை மீண்டும் நீதிமன்றத்திற்கு அழைத்து, பொது மன்னிப்பை இரத்துச் செய்து தற்போது சிறையிலும் அடைத்துள்ளனர். 

அதுமட்டுமல்ல, இறுதியாக அவருடைய காவியுடையையும் களைந்துள்ளனர். சரத் பொன்சேகா, ரஞ்சன் ராமநாயக்க போன்றோருக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு நியாயமானது என்றால் ஞானசாரருக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு மட்டும் எவ்வாறு சட்டவிரோதமானதாக மாறுகின்றது என கேள்வி எழுப்பியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!