கிளிநொச்சி மத்திய கல்லூரியில் 6 மில்லியன் ரூபா செலவில் புதிய பார்வையாளர் அரங்குக்கு அடிக்கல்!

#SriLanka #School #Kilinochchi #LANKA4 #education
Abi
1 hour ago
கிளிநொச்சி மத்திய கல்லூரியில் 6 மில்லியன் ரூபா செலவில் புதிய பார்வையாளர் அரங்குக்கு அடிக்கல்!

கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்வி அதிகாரிகள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர், கல்வித்துறையை மேம்படுத்துதல், மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் மற்றும் இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் தற்கொலைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்துதல் அவசியம் எனக் குறிப்பிட்டார். 

மேலும், சமூக வலைத்தளங்களின் தவறான பயன்பாடும் மாணவர்களின் மனநலத்தைப் பாதிக்கும் காரணிகளில் ஒன்றாகும் எனத் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!