அழகுசாதன பொருட்களில் மறைத்து வைத்து போதைப்பொருள் கடத்தல் - தாய்லாந்தை சேர்ந்த மூவர் பலி!
தாய்லாந்தைச் சேர்ந்த 03 பிரஜைகள் போதைப்பொருட்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுமார் 51 மில்லியன் ரூபாய் மதிப்பிலான ஹஷிஷ் போதைப்பொருட்களே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்கள் 22, 22 மற்றும் 33 வயதுடைய தாய்லாந்து நாட்டவர்கள் ஆவர். இவர்கள் தொழில் ரீதியாக வாகன ஓட்டுநர்களாகப் பணியாற்றுபவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் தாய்லாந்தின் பேங்காக் நகரிலிருந்து 'தாய் ஏர்வேஸ்' (Thai Airways) விமான சேவைக்குச் சொந்தமான TG 307 என்ற விமானம் மூலம், இன்று அதிகாலை 12.30 மணியளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இவர்கள் கொண்டு வந்த மூன்று பயணப் பைகளில், அழகுசாதனப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், மொத்தம் 5 கிலோகிராம் 96 கிராம் எடையுள்ள ஹஷிஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்ட மூவரும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருளும் மேலதிக விசாரணைகளுக்காக இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளன.