இன்ஃப்ளூயன்ஸா தொற்று பாதிப்பு அதிகரிப்பு - தொற்றுநோயியல் நிபுணர் வைத்திய ஆலோசனை!

#SriLanka #doctor #Fever #Influenza
Thamilini
1 hour ago
இன்ஃப்ளூயன்ஸா  தொற்று பாதிப்பு அதிகரிப்பு -   தொற்றுநோயியல் நிபுணர் வைத்திய ஆலோசனை!

இலங்கையில் கடந்த சில வாரங்களாக இன்ஃப்ளூயன்ஸா (influenza) பாதிப்புகள் அதிகரித்துள்ளதாக தொற்றுநோய் தடுப்புப் பிரிவு  தெரிவித்துள்ளது.

இருப்பினும் இந்நிலைமை குறித்து  பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று  தலைமை தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் பாலித கருணபேம, குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் (Health Promotion Bureau) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

கடந்த மூன்று முதல் நான்கு வாரங்களாக, கண்காணிப்பு அமைப்பின் மூலம் இன்ஃப்ளூயன்ஸா பாதிப்புகள் அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக வைத்தியர் கருணபேம தெரிவித்தார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  “கடந்த வாரம் பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளில் சுமார் 35 சதவீதமானவை இன்ஃப்ளூயன்ஸா பாதிப்புகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. 

நாட்டில் தற்போது பரவி வரும் இருமல், சளி மற்றும் காய்ச்சல் பாதிப்புகளில் பெரும்பாலானவை இன்ஃப்ளூயன்ஸாவினால் ஏற்படுபவை என்பதை இது காட்டுகிறது. 

இருப்பினும், இந்த நோய் பொதுவாக சிகிச்சையின் மூலம் மூன்று முதல் நான்கு நாட்களுக்குள் குணமடைந்துவிடும்.  பெரிய சிக்கல்களை ஏற்படுத்தாது. எனவே, பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை,” என்று அவர் கூறினார். 

கர்ப்பிணிப் பெண்கள், சிறு குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நீரிழிவு, இதய நோய், சிறுநீரக நோய் போன்ற தொற்றாத நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இன்ஃப்ளூயன்ஸா பாதிப்பு தீவிரமடையக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார். 

 பாதிக்கப்பட்ட ஒருவர் இருமும்போதோ அல்லது தும்மும்போதோ வெளியேறும் நீர்த்துளிகள் மூலமாகவும், நேரடித் தொடர்பு மூலமாகவும் இன்ஃப்ளூயன்ஸா பரவுகிறது என்று தலைமை தொற்றுநோயியல் நிபுணர் விளக்கினார். 

 இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள், நோய் பரவுவதைத் தடுப்பதற்காக, வீட்டிலேயே தங்கி இரண்டு முதல் மூன்று நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். 

 மேலும், அடிக்கடி சோப்பு போட்டு கைகளைக் கழுவுவதும், நோய் பாதிப்பு இருக்கும்போது முகக்கவசம் அணிவதும் வைரஸ் பரவலைக் குறைக்க உதவும் என்று அவர் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!