வடக்கு – கியூபா உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் ஆளுநருடன் கியூபத் தூதுவர் சந்திப்பு.

#SriLanka #NorthernProvince #Meeting #government #LANKA4 #Ambassador #Official
Riya
1 hour ago
வடக்கு – கியூபா உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் ஆளுநருடன் கியூபத் தூதுவர் சந்திப்பு.

இலங்கைக்கான கியூபக் குடியரசின் தூதுவர் பெட்ரிசியா லாசாரா பெகோ குவேராவுக்கும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இடையிலான சந்திப்பு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது, வடக்கு மாகாணத்துக்கும் கியூபாவுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துதல், மாகாணத்தின் பொருளாதார வளங்கள் மற்றும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்துள்ள முதலாவது கியூபத் தூதுவர் என்ற வகையில் தாம் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்த தூதுவர், இந்தப் பயணம் இரு தரப்புக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும் எனக் குறிப்பிட்டார்.

மேலும், கியூபாவின் முக்கிய தலைவரான பிடல் காஸ்ட்ரோவின் 100ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகள் யாழ்ப்பாணத்திலும் நடைபெறவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதன்போது, வடக்கு மாகாணத்துக்கு முதன்முறையாக வருகை தந்துள்ள கியூபத் தூதுவரை வடக்கு மாகாண மக்கள் சார்பில் வரவேற்பதாகத் தெரிவித்த ஆளுநர் நா.வேதநாயகன், பிடல் காஸ்ட்ரோ மற்றும் கியூபா தொடர்பில் தமக்கு பல்வேறு விடயங்கள் தெரியும் என்றும் குறிப்பிட்டார்.

இச்சந்திப்பில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மற்றும் பிரத்தியேகச் செயலாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!