ஞானசார தேரரின் விடுதலை பேரணி - இன்றுடன் நிறைவுபெறுகிறது!
#SriLanka
#Colombo
#Gnanasara Thero
#Monk
#Rally
Thamilini
1 hour ago
கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி, மகா சங்கத்தினரின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட “நீதிக்கான பேரணி” (Justice for the Robe – National Pledge Offering and Freedom March), இன்று (15) கொழும்பை வந்தடையவுள்ளது.
இதனுடன் இந்தப் பேரணி நிறைவு பெறுகிறது.
இந்த நடைப்பயணம் கடந்த அக்டோபர் 10-ஆம் திகதி கண்டி, வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையில் ஆரம்பமானது.
இது கடுகன்னாவ, கேகாலை, வரக்காபொல மற்றும் நிட்டம்புவ ஆகிய இடங்களினூடாகப் பயணித்து, நேற்று (14) கடவத்தையை வந்தடைந்தது.
இதற்கமைய, இன்று காலை கடவத்தையிலிருந்து மீண்டும் பயணத்தைத் தொடங்கும் இந்தப் பேரணி, கொழும்பை நோக்கிச் செல்லவுள்ளது.