அனோஜன் சிவராசா தீர்ப்பு - சவுதி அரேபியாவிற்கு நன்றி தெரிவித்த அநுர

#SriLanka #LANKA4 #AnuraKumaraDissanayake #saudi #L4 #SivarasaAnojan #DeathPenalty
Prasu
2 hours ago
அனோஜன் சிவராசா தீர்ப்பு - சவுதி அரேபியாவிற்கு நன்றி தெரிவித்த அநுர

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பெரும் கவலையோடு எதிர்பார்க்கப்பட்ட இலங்கைப் பிரஜை அனோஜன் சிவராசாவின் மரண தண்டனையை சவூதி அரேபிய உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. ​

இந்நிலையில், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்திற்கு இலங்கை ஜனாதிபதி தனது முழுமையான வரவேற்பையும் நன்றியையும் தெரிவித்துள்ளார். ​

மேலும், "இந்தத் தீர்மானம் அனோஜனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அத்துடன் இந்த வழக்கை மிகுந்த கவலையுடன் உன்னிப்பாகக் கவனித்து வந்த அனைத்து இலங்கையர்களுக்கும் பெரும் நிம்மதியை அளிக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார். ​

சவூதி அரேபியாவின் சட்ட நடைமுறைகளுக்கு மதிப்பளித்து, அமைதியான மற்றும் பொறுமையான இராஜதந்திர அணுகுமுறையைப் பயன்படுத்தியதே இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!