செட்டிபாளையத்திற்குள் அதிகாலையில் புகுந்த காட்டு யானைகள்; அச்சத்தில் கிராம மக்கள்!

#SriLanka #people #Elephant #Home #LANKA4 #Village
Riya
3 hours ago
செட்டிபாளையத்திற்குள் அதிகாலையில் புகுந்த காட்டு யானைகள்; அச்சத்தில் கிராம மக்கள்!

செட்டிபாளையம் கிராமத்திற்குள் இன்று (14) அதிகாலை புகுந்த காட்டு யானைகளால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

இன்று அதிகாலை கிராமத்திற்குள் நுழைந்த காட்டு யானைகள், பொதுமக்களின் வீடுகளுக்கு அருகில் சென்று சேதங்களை ஏற்படுத்தியதுடன், அப்பகுதியில் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியுள்ளன.

இதனால், அதிகாலை வேளையில் அத்தியாவசியத் தேவைகளுக்காக வீடுகளை விட்டு வெளியே வந்த மக்கள், பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்லத் தயாரானவர்கள் எனப் பலரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

கிராமப் பகுதிகளில் தொடர்ச்சியாக இடம்பெறும் காட்டு யானைகளின் ஊடுருவலால், மக்களின் அன்றாட வாழ்க்கையும் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே, காட்டு யானைகளின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்தி, பொதுமக்களின் உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாக்க உரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!