ஷஷி வீரவன்ச தொடர்பான வழக்கு விசாரணை பிற்போடப்பட்டது!

#SriLanka #Colombo #LANKA4 #Case #Court #Postponed
Abi
1 hour ago
ஷஷி வீரவன்ச தொடர்பான வழக்கு விசாரணை பிற்போடப்பட்டது!

முறையற்ற இராஜதந்திர கடவுச்சீட்டை வைத்திருந்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஷஷி வீரவன்சவின் தண்டனை தொடர்பான நடவடிக்கைகளை எதிர்வரும் ஒக்டோபர் 26ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று (12) உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வழக்கின் பிரதிவாதி மேல்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேன்முறையீடு தொடர்பான நடவடிக்கைகளின் பதிவுகளை ஒக்டோபர் 26ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பிரதிவாதி சார்பில் முன்னிலையான சட்டத்தரணி முன்வைத்த கோரிக்கையைப் பரிசீலித்த பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

குறித்த மேன்முறையீட்டு வழக்கு இன்று மேல்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த நிலையில், வழக்கை வேறொரு திகதிக்கு ஒத்திவைக்குமாறு சட்டத்தரணி கோரியிருந்தார்.

கடந்த 2022ஆம் ஆண்டு மே 27ஆம் திகதி, முறையற்ற இராஜதந்திர கடவுச்சீட்டை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஷஷி வீரவன்ச குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

அபராதத்தைச் செலுத்தத் தவறினால் மேலும் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த தீர்ப்பை 2026ஆம் ஆண்டு ஜூன் 11ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!