நாட்டின் இரண்டாவது செவ்விளநீர் கிராமம் பதுளையில் ஆரம்பம்!

#SriLanka #Badulla #Coconut #Country #LANKA4 #Village
Abi
2 hours ago
நாட்டின் இரண்டாவது செவ்விளநீர் கிராமம் பதுளையில் ஆரம்பம்!

பெருந்தோட்டப் பயிர்கள் மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சினால், நாடு முழுவதும் மூன்று ஆண்டுகளில் 250 செவ்விளநீர் கிராமங்களை நிறுவும் தேசிய திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதன் கீழ், நாட்டின் இரண்டாவது செவ்விளநீர் கிராமத்தை நிறுவும் பணிகள் அண்மையில் பதுளை மாவட்டத்தின் ரிதீமாலியத்த, தெஹிகம பகுதியில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

கடந்த செப்டம்பர் 2ஆம் திகதி இத்திட்டத்தின் முதற்கட்டம் வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இரண்டாவது செவ்விளநீர் கிராமம் பதுளை மாவட்டத்தில் உருவாக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!