ஷிரந்தி ராஜபக்ஷ தாக்கல் செய்த முன்பிணை மனு நிராகரிப்பு!
#SriLanka
#CourtOrder
#Bail
#Shiranthi Rajapaksa
#anticipatory bail
Thamilini
1 hour ago
முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ தாக்கல் செய்திருந்த முன்பிணை மனுவை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
'சிரிலிய சவிய' (Siriliya Saviya) கணக்கு தொடர்பான விவகாரத்தில், நிதிக்குற்றங்கள் விசாரணைப் பிரிவினால் (FCID) தான் கைது செய்யப்படக்கூடும் என்ற அச்சத்தின் அடிப்படையில் அவர் இந்த முன்பிணை மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை கடந்த அக்டோபர் 6-ஆம் திகதி மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றது.
இதன்போது, நிதிக்குற்றங்கள் விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி இன்று (12) நீதிமன்றத்தில் ஆஜராகி, இவ்விவகாரம் தொடர்பான உண்மைகளைத் தெரிவிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமைகுறிப்பிடத்தக்கது.