இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து கடத்தல்: பேலியகொடவில் மீட்பு

#SriLanka #Colombo #Vavuniya #Bus #information #Transport
Abi
3 hours ago
இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து கடத்தல்: பேலியகொடவில் மீட்பு

கொழும்பு, பெஸ்டியன் மாவத்தையில் உள்ள மத்திய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று திருடப்பட்டு, பேலியகொட பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

வவுனியாவிலிருந்து நொச்சியாகம நோக்கி சேவையில் ஈடுபடும் குறித்த பேருந்து, மீண்டும் வவுனியாவுக்கு இயக்கப்படுவதற்காக நேற்று முன்தினம் அதிகாலை கொழும்பு பெஸ்டியன் மாவத்தை பேருந்து நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.

இதன்போது, பேருந்தின் சாவியை இரகசியமான இடத்தில் வைத்துவிட்டு ஓட்டுநர் கீழே இறங்கியிருந்த நிலையில், பகல் சேவைக்காக மற்றொரு ஓட்டுநர் வந்தபோது பேருந்து காணாமல் போயிருந்தது.

இதனையடுத்து, கொழும்பு மத்திய பேருந்து நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டதுடன், புறக்கோட்டை பகுதியில் பேருந்தைத் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்த நிலையில், பேலியகொட பகுதியில் உள்ள வீதியொன்றில் குறித்த பேருந்து நிறுத்தப்பட்டுள்ளதாக மற்றொரு பேருந்து ஓட்டுநர் வழங்கிய தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் அங்கு சென்று பேருந்தை மீட்டுள்ளனர்.

எனினும், பேருந்தில் இருந்த டீசல் முழுவதும் அகற்றப்பட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் புறக்கோட்டை காவல்துறையினரும், கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தின் விசாரணை அதிகாரிகளும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும், கொழும்பு கைரேகைப் பதிவு அலுவலக அதிகாரிகளும் சம்பவ இடத்திற்குச் சென்று பேருந்தில் தடயங்களைச் சேகரித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!