இவ்வருடத்தில் 6,865.4 மில்லியன் அமெரிக்க டொலர் அந்நிய செலவாணியாக ஈட்டப்பட்டுள்ளது
#SriLanka
#Central Bank
#Dollar
Thamilini
2 hours ago
இவ்வருடம் ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலப்பகுதியில் வெளிநாடுகளில் பணிபுரிவோரிடமிருந்து மொத்தம் 6,865.4 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பணம் நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் இப்பண அனுப்பீடுகளின் மொத்த மதிப்பு 5,811.7 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்த நிலையில், இவ்வருடத்தின் அதே காலப்பகுதியில் 1,053.7 மில்லியன் அமெரிக்க டாலர் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
அதேவேளையில், இவ்வருடம் செப்டம்பர் மாதத்தில் பெறப்பட்ட பண அனுப்பீடுகளின் அளவு 734.4 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது.
இது கடந்த ஆண்டு செப்டம்பரில் பதிவான 695.7 மில்லியன் அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் அதிகமாகும். இதன் மூலம், பண அனுப்பீட்டு வரவுகளில் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமை புலனாகிறது.