மூன்று பிரதான கல்விச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானம்

#SriLanka #Parliament #government #education
Thamilini
1 hour ago
மூன்று பிரதான கல்விச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானம்

இலங்கையின் பாடசாலை மற்றும் உயர்கல்வித் துறையில் புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில், மூன்று பிரதான கல்விச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

இதற்கமைய புதிய பாடத்திட்ட அறிமுகம், பாடசாலைகளை டிஜிட்டல் மயமாக்கும் பில்லியன் கணக்கிலான திட்டம் மற்றும் உயர்கல்வி சேர்க்கைக்கான ஒற்றை விண்ணப்ப முறைமை ஆகியவை இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

பாராளுமன்றத்தில்  நேற்று (09) நடைபெற்ற கல்வி அமைச்சின் தன்னார்வ ஆலோசனைக் குழுவுடனான சந்திப்பின் போது, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இம்மாற்றங்கள் குறித்த முக்கிய விபரங்களை வெளியிட்டார்.

 தேசிய கல்வி ஆணைக்குழு தயாரித்த கல்விச் சீர்திருத்தக் கருத்துப் பத்திரம், திருத்தப்பட்ட தேசிய பாடத்திட்டம் மற்றும் 1 முதல் 11 ஆம் தரங்களுக்கான மாணவர் மதிப்பீட்டு சட்டகம் ஆகியவற்றுக்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.

 கல்விப் பொதுத் தராதர உயர்தர மாணவர்களுக்கான புதிய மதிப்பீட்டு முறைமை தற்போது தயாரிப்பு கட்டத்தில் உள்ளது. 

பாடசாலைகளில் டிஜிட்டல் கல்வியை விரிவுபடுத்த 5 ஆண்டுகள் கொண்ட 96 பில்லியன் ரூபா திட்டத்துக்கு கொள்கை அளவிலான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 மாணவர்களுக்கான இணைய பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டு, அதற்கான முன்னோடித் திட்டம் எதிர்வரும் நவம்பரிலும், முழுமையான அமுலாக்கம் 2027 தொடக்கத்திலும் நடைமுறைக்கு வரும்.

 உயர்தர பரீட்சையை முடிக்கும் மாணவர்கள் பல்கலைக்கழகங்கள், தேசிய கல்வியியல் கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்களுக்கு ஒரே இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்கும் ஒருங்கிணைந்த முறைமை 2028 முதல் அறிமுகப்படுத்தப்படும்.

வெவ்வேறு நிறுவனங்களுக்குத் தனித்தனியாக விண்ணப்பிப்பதில் மாணவர்கள் எதிர்கொள்ளும் நிர்வாகச் சிரமங்களைக் குறைப்பதே இதன் பிரதான நோக்கமாகும். 

இது தவிர, தேசிய கல்விச் சபை அமைத்தல், அரசு சாரா தனியார் பட்டப்படிப்பு நிறுவனங்களை ஒழுங்குமுறைப்படுத்துதல், ஆசிரியர் ஆட்சேர்ப்பு மற்றும் இடமாற்றங்கள், மாணவர் ஊட்டச்சத்து, பாடசாலை சுகாதார வசதிகள் மேம்பாடு மற்றும் தொழிற்கல்வியில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துதல் போன்ற விடயங்கள் குறித்தும் இதன்போது ஆலோசிக்கப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!