ஆலையடிவேம்பில் உலக முட்டை தின நிகழ்வு: 25 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு இலவசமாக முட்டைகள் வழங்கி வைப்பு!

#SriLanka #Health #Department #Egg #Medical #Event #Day #LANKA4 #officer #Pregnant
Riya
1 hour ago
ஆலையடிவேம்பில் உலக முட்டை தின நிகழ்வு: 25 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு இலவசமாக முட்டைகள் வழங்கி வைப்பு!

உலக முட்டை தினத்தை முன்னிட்டு, ஆலையடிவேம்பு அரசு கால்நடை வைத்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் விசேட விழிப்புணர்வு நிகழ்வும், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு இலவசமாக முட்டைகள் வழங்கும் நிகழ்வும் இன்று (09) ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நடைபெற்றது.

கால்நடை வைத்தியர் எஸ். மவுனிகா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு, கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களப் பணிப்பாளரின் வழிகாட்டுதலில், “முட்டையை உட்கொள்ளுங்கள் ஆரோக்கியத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்” என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, அன்றாட உணவில் முட்டையைச் சேர்த்துக்கொள்வதன் மூலம் கிடைக்கக்கூடிய புரதச்சத்து மற்றும் அதன் ஊட்டச்சத்து நன்மைகள் தொடர்பில் விழிப்புணர்வு வழங்கப்பட்டது. 

குறிப்பாக, மூளை வளர்ச்சி, கண் ஆரோக்கியம், நோய் எதிர்ப்புச் சக்தி, எலும்புகளின் வலிமை மற்றும் உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதில் முட்டையின் பங்களிப்பு குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

தொடர்ந்து, ஆலையடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த 25 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தலா 25 முட்டைகள் வீதம் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் ஆலையடிவேம்பு அரசு கால்நடை வைத்திய அலுவலக உத்தியோகத்தர்கள், சுகாதாரப் பிரிவு உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேசத்தைச் சேர்ந்த கர்ப்பிணித் தாய்மார்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

ஊட்டச்சத்து மிக்க உணவுப் பழக்கவழக்கங்களை ஊக்குவித்தல் மற்றும் முட்டையின் உணவுப் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!