ஞானசார தேரரின் உடை விவகாரம் - ஐரோப்பாவில் உள்ள இலங்கை பிக்கு சங்கம் விடுத்துள்ள கோரிக்கை!

#SriLanka #Gnanasara Thero #Dress
Thamilini
2 hours ago
ஞானசார தேரரின் உடை விவகாரம் -  ஐரோப்பாவில் உள்ள இலங்கை பிக்கு சங்கம் விடுத்துள்ள கோரிக்கை!

ஐரோப்பாவில் உள்ள இலங்கை பிக்கு சங்கம், சிறையில் உள்ள பிக்குகள் ஏதேனும் ஒரு நோக்கத்திற்காக சிறையிலிருந்து வெளியே அழைத்து வரப்படும்போது, ​​அவர்கள் தங்களின் இல்லற உடைகளுக்குப் பதிலாக, தங்களின் மத உடையான அங்கிகளை அணிவதற்கு சட்டப்பூர்வ அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று கோரி, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளது. 

ஐரோப்பாவில் உள்ள இலங்கை பிக்கு சங்கத்தின் பொதுச் செயலாளரும், சைப்ரஸின் பிரதம சங்கநாயக்கருமான வணக்கத்திற்குரிய மொரவக்க சொரத்த நாயக்க தேரரும் ஜெர்மனியின் பிரதம நீதி சங்கநாயக்கருமான வணக்கத்திற்குரிய ரத்மலே புன்னரத்ன நாயக்க  தேரரும் கையொப்பம் இட்டு இந்த கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 

ஒரு நாட்டின் குடிமக்கள் நீதிமன்றங்களையும் அவற்றின் தீர்ப்புகளையும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்பதும், சட்டப்படி தண்டிக்கப்பட்டு தண்டனை அனுபவிக்கும் பிக்குகள் சிறை விதிகளுக்குக் கட்டுப்படுவது இயல்பானது என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று என அச்சங்கம் சுட்டிக்காட்டுகிறது.

இருப்பினும், பிரதான ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளியான செய்திகளின்படி, தேரர்கள் சிறையிலிருந்து வெளியே கொண்டுவரப்படும்போது இல்லற உடையில் அணிவிக்கப்படுவது பௌத்த மற்றும் பௌத்தரல்லாத மக்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தண்டனைக் காலம் முடிந்த பிறகு தேரர்கள் மீண்டும் சமூகத்தில் சமய மற்றும் ஆன்மீக சேவைகளில் ஈடுபட வேண்டியிருப்பதால், அந்தத் தண்டனையானது சீர்திருத்த அம்சங்களைக் கொண்டிருக்க வேண்டும், மேலும் அது தனிநபரின் ஆளுமைக்குத் தீங்கு விளைவிக்கக் கூடாது. 

 எனவே, தேரர்கள் சிறையிலிருந்து வெளியே கொண்டுவரப்படும்போது அங்கி அணிவதற்கான வாய்ப்புகளை வழங்குவது, பொதுமக்களின் நலனுக்கும் சிறைத்துறையின் நற்பெயருக்கும் மதிப்பு சேர்க்கும் என்று சங்கம் தனது நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. 

 இந்தக் கோரிக்கை அடங்கிய கடிதத்தின் நகல்கள் மாண்புமிகு மகாநாயக்க தேரர், ஜனாதிபதி மற்றும் இவ்விஷயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!