ஜனாதிபதி – மகாநாயக்க தேரர்கள் இன்று விசேட சந்திப்பு
#SriLanka
#Meeting
#Gnanasara Thero
#LANKA4
#AnuraKumaraDissanayake
Riya
1 hour ago
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் பௌத்த முப்பீடங்களின் மகாநாயக்க தேரர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது.
பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் சிவில் உடையில் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட விவகாரம் தொடர்பில் மகாநாயக்க தேரர்கள் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு கடிதம் அனுப்பியிருந்தனர்.
இந்த விவகாரம் தொடர்பில் கலந்துரையாடி, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதியுடன் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.