பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

#SriLanka #Warning #lightning
Thamilini
2 hours ago
பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

மேற்கு, சபரகமுவ, மத்திய, ஊவா, வடமேற்கு, வடக்கு, வடமத்திய மற்றும் தெற்கு மாகாணங்களுக்கு பலத்த மின்னல் எச்சரிக்கையை வானிலை ஆய்வுத் துறை வெளியிட்டுள்ளது. 

 இன்று (08) காலை 11.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை அதிகாலை 01.00 மணி வரை செல்லுபடியாகும். 

 அதன்படி, மேற்கு, சபரகமுவ, மத்திய, ஊவா, வடமேற்கு, வடக்கு, வடமத்திய மற்றும் தெற்கு மாகாணங்களில் உள்ள சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த மின்னல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. 

மின்னலால் ஏற்படும் அபாயங்களைக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களை வானிலை ஆய்வுத் துறை கேட்டுக்கொள்கிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!