கிரான்குளத்தில் அடக்கம் செய்யப்பட்ட இளம் பெண்ணின் சடலம் தோண்டியெடுப்பு

#SriLanka #Women #Young #LANKA4
Riya
1 hour ago
கிரான்குளத்தில் அடக்கம் செய்யப்பட்ட இளம் பெண்ணின் சடலம் தோண்டியெடுப்பு

கிரான்குளத்தில் அண்மையில் உயிரிழந்து அடக்கம் செய்யப்பட்ட 41 வயதான பெண்ணொருவரின் சடலம், நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று தோண்டியெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 12ஆம் திகதி கிரான்குளம் கூட்டுறவுச் சந்திக்கு அருகில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற விபத்தில், கிரான்குளத்தைச் சேர்ந்த சர்வேஸ்வரன் கஜேந்தினி காயமடைந்திருந்தார்.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று ஜூலை 21ஆம் திகதி வீடு திரும்பிய அவர், மீண்டும் உடல்நலக்குறைவால் ஆகஸ்ட் 7ஆம் திகதி மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 11ஆம் திகதி உயிரிழந்தார்.

பின்னர் ஆகஸ்ட் 12ஆம் திகதி அவரது சடலம் கிரான்குளம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், விபத்து இடம்பெற்று சுமார் ஒரு மாதத்திற்குப் பின்னர் அவர் உயிரிழந்துள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்தியதால், மரணம் விபத்தின் காரணமாக ஏற்பட்டதா என்பதை கண்டறிய பிரேத பரிசோதனை மேற்கொள்ளுமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவின்படி, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ. தர்சினி முன்னிலையில் இன்று பொலிஸாரால் சடலம் தோண்டியெடுக்கப்பட்டது.

பிரேத பரிசோதனையின் பின்னரே மரணத்திற்கான காரணம் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!