பொருட்கள் இறக்குமதி என்ற பெயரில் ரூ.7.5 பில்லியன் மோசடி? 25 வயது இளைஞர் கைது

#SriLanka #Import #Fraud
Riya
2 hours ago
பொருட்கள் இறக்குமதி என்ற பெயரில் ரூ.7.5 பில்லியன் மோசடி? 25 வயது இளைஞர் கைது

பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி, தொலைநகல் பணப் பரிமாற்றம் மூலம் 25 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவர் காவல்துறையின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024 ஜனவரி முதல் 2025 ஜூலை வரையான காலப்பகுதியில், இலங்கையில் பதிவு செய்யப்பட்ட 6 போலி நிறுவனங்களின் ஊடாக இந்தப் பணம் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வணிக வங்கிகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட தொலைநகல் பணப் பரிமாற்றங்களின் ஊடாக சுமார் 7.5 பில்லியன் ரூபாய் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், ஆனால் அதற்கான பொருட்கள் எதுவும் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவில்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!