இடியுடன் கூடிய மழை பெய்யும் - தேவையான முன்னெச்சரிக்கைகளை எடுக்க அறிவுறுத்தல்

#SriLanka #weather #Rain
Thamilini
1 hour ago
இடியுடன் கூடிய மழை பெய்யும் - தேவையான முன்னெச்சரிக்கைகளை எடுக்க அறிவுறுத்தல்

நாட்டின்  பெரும்பாலான பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

 மேல், சபரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களிலும், அனுராதபுரம் மாவட்டத்திலும் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். 

 இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படும் தற்காலிகமான பலத்த காற்று மற்றும் மின்னலினால் உண்டாகும் பாதிப்புகளைக் குறைக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்றும் அத்திணைக்களம் மேலும் கூறியுள்ளது. 

 காலை வேளையில் மேல், சபரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பனிமூட்டமான நிலை நிலவக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!