மாணவர் உயிரிழப்பு விவகாரம்: 11 மாணவர்களை நிரந்தரமாக நீக்கிய சபரகமுவ பல்கலைக்கழகம்

#SriLanka #Death #Student #LANKA4 #University #Case
Abi
58 minutes ago
மாணவர் உயிரிழப்பு விவகாரம்: 11 மாணவர்களை நிரந்தரமாக நீக்கிய சபரகமுவ பல்கலைக்கழகம்

சபரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டில் கல்வி பயின்ற 23 வயதான சரித் திலீஷான் என்ற மாணவரின் உயிரிழப்பு தொடர்பாக முன்வைக்கப்பட்ட பகிடிவதை மற்றும் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, 11 மாணவர்களை பல்கலைக்கழகத்திலிருந்து நிரந்தரமாக நீக்க நிர்வாக சபை தீர்மானித்துள்ளது.

குறித்த மாணவர் உள்ளிட்ட மாணவர்களுக்கு துன்புறுத்தல், உடல் மற்றும் உள ரீதியான அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட கடுமையான ஒழுக்காற்று விதிமீறல்கள் இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை அறிக்கை கடந்த வாரம் வெளியிடப்பட்டிருந்தது.

இதனடிப்படையில், குறித்த 11 மாணவர்களின் பல்கலைக்கழகப் பதிவு நிரந்தரமாக இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், பல்கலைக்கழக வளாகம், விடுதிகள் உள்ளிட்ட பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமான எந்தவொரு இடத்திற்கும் துணைவேந்தரின் எழுத்துமூல அனுமதியின்றி நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 2023 ஏப்ரல் 29ஆம் திகதி சரித் திலீஷான் தனது வீட்டில் உயிரிழந்திருந்தார். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கடுமையான பகிடிவதை மற்றும் உடல், உள ரீதியான துன்புறுத்தல்களைத் தொடர்ந்து அவர் இந்த முடிவை எடுத்ததாக அவரது பெற்றோர் தெரிவித்திருந்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரும் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். இதனையடுத்து, பகிடிவதை சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 14 மாணவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டிருந்தது.

பல்கலைக்கழகங்களில் பகிடிவதை மற்றும் மாணவர்களுக்கு எதிரான உடல், உள ரீதியான துன்புறுத்தல்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் இந்தச் சம்பவம் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!