INDvsWI - முதலாவது T20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி

#India #LANKA4 #T20 #Cricket #westIndies #L4
Prasu
57 minutes ago
INDvsWI - முதலாவது T20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு நாள் மற்றும் T20 தொடர்களில் விளையாடிய வருகிறது.

அந்தவகையில், இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது T20 போட்டி உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் நடைபெற்றது.

இப்போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 

அதன்படி, முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 19.1 ஓவர்களில் 171 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில், ஷாய் ஹோப் 52 ஓட்டங்களும் ஷெர்பேன் ரூதர்போர்டு 56 ஓட்டங்களும் குவித்தனர்.

அதனை தொடர்ந்து, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி 14.4 ஓவர்களிலேயே இலக்கை கடந்தது.

இந்திய அணி சார்பில், அதிரடியாக விளையாடிய ஸ்ரேயஸ் ஐயர் 102 ஓட்டங்களும் இஷான் கிஷன் 32 ஓட்டங்களும் குவித்தனர்.

இறுதியில், இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!