விமானத்தை சுட்டு வீழ்த்த ரெடியாக இருந்த இஸ்ரேல்
டெல் அவிவ்: ஃப்ளைதுபாய் காக்பிட்டில் நடந்த தாக்குதலுக்கு பிறகு, விமானம் தொடர்ந்து டெல் அவிவ் நோக்கி சென்றிருந்தால் அதை வானிலேயே சுட்டு வீழ்த்தவும் கூட இஸ்ரேல் தயாராக இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
விமானம் திடீரென உயரம் இழந்ததோடு காக்பிட் தொடர்பும் துண்டிக்கப்பட்டதால் இஸ்ரேலை குறிவைத்த தாக்குதலாக இருக்கும் என சந்தேகித்த இஸ்ரேல் படைகள், விமானத்தை சுட்டு வீழ்த்தவும் ரெடியாக இருந்ததாக கூறப்படுகிறது.
கடந்த செப்டம்பர் 30ம் தேதி துபாயில் இருந்து டெல் அவிவ் நோக்கி ஃப்ளைதுபாய் விமானம் புறப்பட்டது. அப்போது விமானத்தின் துணை விமானி ஹமாம் அல்-ஹம்மாமி, தலைமை விமானி ஸ்மிட் மச்சார் மீது தாக்குதல் நடத்தி, விமானத்தை விபத்திக்குள்ளாக்க முயன்றார்.
இதனால் நடுவானில் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு வழியாக பைலட் ஸ்மித் மச்சார் மற்றும் பயணிகள் சிலர் இணைந்து அந்த துணை விமானியை கட்டுப்படுத்தினர்.