நாடு திரும்பிய ஷிரந்தி ராஜபக்ச – 13ஆம் திகதி நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலை!

#SriLanka #Mahinda Rajapaksa #Investigation #Crime #LANKA4
Abi
2 hours ago
நாடு திரும்பிய ஷிரந்தி ராஜபக்ச – 13ஆம் திகதி நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலை!

சிங்கப்பூரில் இருந்து நேற்றிரவு நாடு திரும்பிய முன்னாள் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்சவை எதிர்வரும் 13ஆம் திகதி நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கண் அறுவை சிகிச்சைக்காக வெளிநாடு சென்றிருந்த ஷிரந்தி ராஜபக்ச, சிங்கப்பூரில் இருந்து மலேசியாவின் கோலாலம்பூர் ஊடாக மலேசியன் எயார்லைன்ஸ் விமானத்தில் நேற்று (05) இரவு இலங்கையை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அவர் விமான நிலையத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் வழியைத் தவிர்த்து, சிறப்பு விருந்தினர்களுக்காக பயன்படுத்தப்படும் ‘கோல்டு ரூட்’ வசதியைப் பயன்படுத்தி விமான நிலையத்திலிருந்து வெளியேறியதாகவும், இதற்காக 216 அமெரிக்க டொலர்கள் செலுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ‘சிரிலிய சவிய’ கணக்கு தொடர்பான விசாரணையில் தம்மை கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி ஷிரந்தி ராஜபக்சவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (06) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

குறித்த மனுவில், கண் சிகிச்சைக்காக வெளிநாடு சென்றிருந்த தாம் குமட்டல், தலைச்சுற்றல், மயக்கம் மற்றும் இதயப் பிரச்சினைகள் உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உயர் இரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால் மற்றும் நீரிழிவு நோய் உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகளுக்காக சிறப்பு மருத்துவ சிகிச்சை பெற வேண்டியுள்ளதாகவும், சிகிச்சைகள் நிறைவடைந்த பின்னர் இலங்கைக்கு திரும்பி குற்றப் புலனாய்வுத் துறையில் முன்னிலையாகத் தயாராக இருப்பதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், நாடு திரும்பியுள்ள ஷிரந்தி ராஜபக்சவை எதிர்வரும் 13ஆம் திகதி நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!