காணாமல் போன கனேடிய மருத்துவ விமானத்தின் தேடும் பணி நிறுத்தம்

#Death #Flight #CANADA #Medical #LANKA4 #Missing #L4
Prasu
1 hour ago
காணாமல் போன கனேடிய மருத்துவ விமானத்தின் தேடும் பணி நிறுத்தம்

மாசசூசெட்ஸ் கடற்கரைக்கு அப்பால் நடந்த மருத்துவ போக்குவரத்து விமான விபத்தில் உயிர் பிழைத்தவர்களைத் தேடும் பணியை அமெரிக்க கடலோரக் காவல்படை நிறுத்தியுள்ளது.

அதனை தொடர்ந்து விமானத்தில் பயணித்த ஆறு பேர் உயிரிழந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

பெர்முடாவிலிருந்து பாஸ்டனுக்குச் சென்று கொண்டிருந்த அந்த விமானம், சனிக்கிழமை அதிகாலை சுமார் 2 மணியளவில் தரை அதிகாரிகளுடனான தொடர்பை இழந்தது. 

பின்னர், அன்றைய தினம் நான்டக்கெட் தீவுக்கு அருகே விமானத்தின் சிதைவுகள் சிதறிக் கிடந்ததை கடலோரக் காவல்படை கண்டறிந்தது.

கனடிய நிறுவனமான லாட்டிடியூட் ஏர் ஆம்புலன்ஸால் இயக்கப்படும் கல்ஃப்ஸ்ட்ரீம் ஜி100 ரக விமானம், ஒரு நோயாளி, ஒரு குடும்ப உறுப்பினர் மற்றும் நான்கு பேர் கொண்ட குழுவினருடன் பெர்முடாவிலிருந்து புறப்பட்டது.

அந்த நோயாளியும் குடும்ப உறுப்பினரும் பெர்முடா நாட்டுக் குடிமக்கள் என அடையாளம் காணப்பட்டனர். 

பெர்முடா காவல்துறை சேவை (BPS) வெளியிட்ட ஓர் அறிக்கையில், பாதிக்கப்பட்டவரின் பெயர் 66 வயதான மர்லின் லவோன் பீன் என்றும் அவரது குடும்ப உறுப்பினர் அவரது மகனான 41 வயதான செர்ஜியோ வெய்ன் லாட்டிமோர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணியாளர்கள் கனடியக் குடிமக்கள் என அடையாளம் காணப்பட்டனர். அவர்களின் பெயர்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!