கலஹா – தெல்தோட்டை வீதியில் பாலம் இடிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
#SriLanka
#Road
#LANKA4
#Traffic
#collapse
#Bridge
Abi
3 hours ago
கலஹா – தெல்தோட்டை பிரதான வீதியில் அமைந்துள்ள பாலமொன்று இடிந்து விழுந்துள்ளதால், குறித்த வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை பெய்த கடும் மழையைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலைமையின் காரணமாகவே பாலம் சேதமடைந்து இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் குறித்த வீதியூடாக பயணிக்கும் வாகன சாரதிகள் மற்றும் பொதுமக்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். எனவே, நிலைமை சீராகும் வரை குறித்த வீதியைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் மற்றும் பயணிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
பாலத்தை சீரமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.