யாழ்ப்பாணத்தில் இளம் பெண் கொலை – சந்தேகநபர் புகையிரதத்தில் பாய்ந்து உயிரிழப்பு

#SriLanka #Jaffna #Women #Young #LANKA4 #Train
Abi
1 hour ago
யாழ்ப்பாணத்தில் இளம் பெண் கொலை – சந்தேகநபர் புகையிரதத்தில் பாய்ந்து உயிரிழப்பு

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் இளம் பெண்ணொருவர் கத்திக்குத்துத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதுடன், அவரது தாயார் படுகாயமடைந்த சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இளைஞர் ஒருவர் புகையிரதம் முன் பாய்ந்து உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று (06) காலை நல்லூர், கோவில் வீதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்த இளைஞர் ஒருவர், அங்கு இருந்த இளம் பெண்ணை கத்தியால் தாக்கியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதன்போது, இளம் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அதேவேளை, அவருடைய தாயாரும் கத்திக்குத்துத் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலை மேற்கொண்டதாகக் கூறப்படும் இளைஞர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்ற நிலையில், அரியாலை பகுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இரவு தபால் புகையிரதம் முன் பாய்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். மேலும், சம்பவத்திற்கான காரணம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!