ஆசிரியர் தின நிகழ்வுகளில் உணவு, பரிசுப் பொருட்களுக்கு தடை – கல்வி அமைச்சு அறிவிப்பு

#Food #LANKA4 #Ministry of Education #Ban #Teacher
Abi
52 minutes ago
ஆசிரியர் தின நிகழ்வுகளில் உணவு, பரிசுப் பொருட்களுக்கு தடை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பாடசாலைகளில் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகளின்போது உணவுப் பொருட்கள் மற்றும் பரிசுப் பொருட்களை வழங்கவோ அல்லது பெற்றுக்கொள்ளவோ கூடாது என கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

பாடசாலைகளில் ஏற்படும் தேவையற்ற பணச் செலவுகளை கட்டுப்படுத்துவதுடன், மாணவர்களிடையே பொருளாதார ரீதியான ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஆசிரியர் தின நிகழ்வுகளை ஆடம்பரமின்றி எளிமையான முறையில் நடத்துமாறு அனைத்து பாடசாலைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வுகளுக்காக மாணவர்கள் அல்லது பெற்றோர்கள் மீது மேலதிக நிதிச்சுமை ஏற்படுத்தப்படுவதைத் தவிர்க்குமாறும் கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

மாணவர்களின் நலன் மற்றும் சமத்துவத்தை கருத்திற்கொண்டு, ஆசிரியர் தின நிகழ்வுகளை எளிமையான முறையில் முன்னெடுக்குமாறு பாடசாலை நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!