தேவபுரம் சன சமூக நிலையத்திற்கு கதிரைகள் மற்றும் சமையல் பாத்திரங்கள் வழங்கிவைப்பு
கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட முறக்கொட்டான்சேனை தேவபுரம் சன சமூக நிலையத்திற்கு தேவையான கதிரைகள் மற்றும் சமையல் பாத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
2026 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் குறித்த பொருட்கள் சன சமூக நிலையத்தினரிடம் கையளிக்கப்பட்டன.
சன சமூக நிலையத்தின் அன்றாட செயற்பாடுகளுக்கும், அங்கு நடைபெறும் சமூக மற்றும் மக்கள் நலன் சார்ந்த நிகழ்வுகளுக்கும் தேவையான வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கோறளைப்பற்று பிரதேச சபையின் கௌரவ பிரதித் தவிசாளர் பத்மநீதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.
சன சமூக நிலையத்தின் தேவைகளை கருத்திற்கொண்டு நிதி ஒதுக்கீட்டின் மூலம் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டமைக்கு பிரதேச மக்கள் மற்றும் நிலைய நிர்வாகத்தினர் நன்றியைத் தெரிவித்துள்ளனர்.