கட்டுகஸ்தோட்டை பகுதிகளில் 48 மணிநேரம் நீர் விநியோகம் தடை

#SriLanka #water #LANKA4 #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
கட்டுகஸ்தோட்டை பகுதிகளில் 48 மணிநேரம் நீர் விநியோகம் தடை

கட்டுகஸ்தோட்டை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அவசியமான திருத்தப் பணிகள் காரணமாக, கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தின் சில பகுதிகளில் 48 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளது.

இதன்படி, நாளை (06) முற்பகல் 9.00 மணி முதல் ஒக்டோபர் 08ஆம் திகதி முற்பகல் 9.00 மணி வரை நீர் விநியோகத் தடை அமுலில் இருக்கும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

உடுவாவல, ராஜபிஹில்ல மற்றும் கோனிகொட ஆகிய பகுதிகளுக்கே இந்த நீர் விநியோகத் தடை ஏற்படவுள்ளது. எனவே, குறித்த காலப்பகுதிக்குத் தேவையான நீரை முன்கூட்டியே சேமித்து, நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

 நீர் விநியோகத் தடையால் ஏற்படும் அசௌகரியங்களுக்கு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை வருத்தம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!