பொதுமக்களின் கவனத்திற்கு - மின்னல் தாக்கம் தொடர்பில் அம்பர் எச்சரிக்கை விடுப்பு
#SriLanka
#Warning
#lightning
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 hour ago
வடமேற்கு, மத்திய, சபரகமுவ, ஊவா, மேல் மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை, மன்னார் ஆகிய மாவட்டங்களில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என்பதால், வளிமண்டலவியல் திணைக்களம் 'அம்பர்' (Amber) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (04) காலை 11.00 மணிக்கு விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை (05) அதிகாலை 1.00 மணி வரை நடைமுறையில் இருக்கும்.
இதன்படி, குறிப்பிடப்பட்ட மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் பல இடங்களில் கடுமையான மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.