கடந்த ஆண்டு போதைப்பொருள் தொடர்பாக 9,105 சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் கைது

#SriLanka #ARREST #children #drugs #LANKA4 #Youngster #2025 #L4
Prasu
1 hour ago
கடந்த ஆண்டு போதைப்பொருள் தொடர்பாக 9,105 சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் கைது

கடந்த வருடத்தில் இலங்கை முழுவதும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட 9,105 சிறுவர்கள் மற்றும் இளைஞர்களில் எட்டு மற்றும் 14 வயதுக்குட்பட்ட 11 சிறுவர்களும் உள்ளடங்குவதாக இலங்கை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கைது நடவடிக்கை அக்டோபர் 30, 2025 மற்றும் அக்டோபர் 1, 2026க்கு இடையில் இடம்பெற்றதாக என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் வூட்லர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களில் 8,932 பேர் ஆண் இளைஞர்கள் மற்றும் 173 பேர் இளம் பெண்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக பொலிஸ் காவலில் வைக்கப்பட்டவர்களில் எட்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளும் அடங்குவது மிகவும் கவலைக்குரியது என்று அத்தியட்சகர் வூட்லர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!