174 பயணிகளின் உயிரை காப்பாற்றிய இந்திய விமானியின் வீரச் செயலைப் பாராட்டிய நெதன்யாகு
நேற்று அதிகாலை துபாயில் இருந்து இஸ்ரேல் நோக்கிச் சென்ற ப்ளைதுபாய் பயணிகள் விமானத்தில், துணை விமானி திடீரென தாக்குதல் நடத்தி விமானத்தை வீழ்த்த முயன்றபோது, பலத்த காயமடைந்த நிலையிலும் இந்திய விமானி ஸ்மித் மச்சார் (Smit Machchhar) சாதுரியமாகச் செயல்பட்டு 174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றினார்.
இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்திய விமானி ஸ்மித் மச்சார் என்பவரைப் பாராட்டினார்.
கத்தியால் குத்தப்பட்டும் கோடாரியால் தாக்கப்பட்டும் இருந்தபோதிலும் பயணிகளைக் காப்பாற்றிய அவரது செயலை 'நம்பமுடியாத அளவிலான துணிச்சல்' என்று அவர் வர்ணித்துள்ளார்.
மச்சார் தாக்கப்பட்ட பிறகு, அந்த விமானம் 30 வினாடிகளுக்கும் குறைவான நேரத்தில் சுமார் 14,000 அடி உயரத்தில் இருந்து கீழ்நோக்கிச் சரிந்தது.
அப்போது விமானத்தில் இருந்த மற்றொரு 'ஃப்ளைதுபாய்' (flydubai) விமானிகள் குழு, பின்னர் அந்த விமானத்தைச் சவூதி அரேபியாவின் தபூக் (Tabuk) நகரில் தரையிறக்கியது.