டிஜிட்டல் மாற்றத்தின் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே அரசின் நோக்கம்
“டிஜிட்டல் மாற்றத்தின் மூலம் தெளிவான மக்கள் சேவையை வழங்க வேண்டும். தொழில்நுட்பத்தின் ஊடாக மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதுடன், புதிய வாய்ப்புகளை விரிவுபடுத்துதல், அரச சேவைகளைப் பலப்படுத்துதல், பொருளாதாரப் பங்கேற்பை உறுதிசெய்தல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் நன்மைகள் அனைவருக்கும் நியாயமான முறையில் கிடைப்பதை உறுதிசெய்தல் ஆகியவையும் இடம்பெற வேண்டும்.
டிஜிட்டல் மயமாக்கலின் ஊடாக முதலீட்டாளர்களை மாத்திரம் ஈர்ப்பது அரசாங்கத்தின் நோக்கமல்ல.
தொழில்நுட்பத் திறன் மற்றும் அறிவை அபிவிருத்தி செய்வதற்குப் பங்களிக்கும் மனிதவளத்தை இலங்கைக்குள் உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.
” அவர் இந்தக் கருத்துக்களை செப்டெம்பர் 23ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற அரசு, தொழில்முனைவு மற்றும் சமூகத் துறைகளில் டிஜிட்டல் மாற்றத்திற்குத் தலைமைத்துவம் வழங்கும் உலகளாவிய தலைமைத் தகவல் அதிகாரிகளின் (Global CIOs) மாநாட்டில் கலந்துகொண்டு தெரிவித்தார்.