மணல் தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்ய குளங்களில் இருந்து கழுவி எடுக்கப்பட்ட மணலை மக்களுக்கு வழங்கும் படி ஆரம்பம்
#SriLanka
#LANKA4
#Public
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Riya
1 hour ago
வடக்கு மாகாணத்தில் நிலவும் மணல் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில், குளங்களில் இருந்து அகழ்ந்து சுத்திகரிக்கப்பட்ட மணலை பொதுமக்களின் கட்டுமானத் தேவைகளுக்காக ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் விநியோகிக்கும் நடவடிக்கை செப்டெம்பர் 23ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
3 கியூப் மணல் 44,000 ரூபாய்க்கு வழங்கப்படுவதுடன், போக்குவரத்துக் கட்டணம் பயணத் தூரத்திற்கு ஏற்ப அறவிடப்படும்.
வீடமைப்பு பயனாளர்கள், அரச வேலைத்திட்டங்கள் மற்றும் தனியார் கட்டுமானத் தேவைகளுக்கென தனித்தனி விண்ணப்ப நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
மணல் விநியோகம் வெளிப்படையான முறையில், மாவட்டச் செயலகம் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் பரிந்துரைகளின் அடிப்படையில், பாரவூர்தி உரிமையாளர் கூட்டுறவுச் சங்கத்தின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளது.