நாடு முழுவதும் பாடசாலைகளுக்கு 4,570 ஸ்மார்ட் போர்ட்கள்!

#SriLanka #PrimeMinister #School #LANKA4 #ADDA #Harini Amarasooriya #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
நாடு முழுவதும் பாடசாலைகளுக்கு 4,570 ஸ்மார்ட் போர்ட்கள்!

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளுக்கு 4,570 ஸ்மார்ட் போர்ட்கள் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இதுவரை 2024ஆம் ஆண்டில் பெறப்பட்ட 1,000 ஸ்மார்ட் போர்ட்கள் 1,000 பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.

சீன உதவித் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட 900 ஸ்மார்ட் போர்ட்களில் 500 போர்ட்கள் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், அவற்றை நிறுவும் பணிகளும் இடம்பெற்று வருகின்றன.

மேலும், மாகாண மட்டத்தில் கொள்வனவு செய்யப்பட்ட 2,670 ஸ்மார்ட் போர்ட்களையும் பாடசாலைகளுக்கு முழுமையாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவற்றில் வடமேல் மாகாணத்திற்கு 524, 

மேல் மாகாணத்திற்கு 481, 

கிழக்கு மாகாணத்திற்கு 371, 

ஊவா மாகாணத்திற்கு 363, 

தென் மாகாணத்திற்கு 311, 

வடமத்திய மாகாணத்திற்கு 200, 

மத்திய மாகாணத்திற்கு 170, 

சப்ரகமுவ மாகாணத்திற்கு 150 மற்றும் வட மாகாணத்திற்கு 100 ஸ்மார்ட் போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன.

பாடசாலை வகுப்பறைகளை டிஜிட்டல்மயமாக்கி, நவீன தொழில்நுட்பத்தை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!