தேர்தலின் பின்னர் அரசாங்கம் பட்டதாரிகளை மறந்துவிட்டது - சஜித் குற்றச்சாட்டு

#SriLanka #Parliament #Sajith Premadasa #Job Vacancy #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
தேர்தலின் பின்னர் அரசாங்கம் பட்டதாரிகளை மறந்துவிட்டது - சஜித் குற்றச்சாட்டு

வேலையில்லாப் பட்டதாரிகள் தொடர்பில் எந்த வேலைத்திட்டமும் இந்த அரசாங்கத்திடம் இல்லை. தேர்தல் காலத்தில் பட்டதாரிகள் குறித்த புள்ளிவிபரங்களை இவர்கள் நன்றாகத் தயாரித்து வைத்திருந்த போதிலும், தேர்தலின் பின்னர் அரசாங்கம் பட்டதாரிகளை மறந்துவிட்டது என நாடாளுமன்ற உறுப்பினரும், எதிர்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச விசனம் தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத்தின் நேற்றைய அமர்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,  சமகாலத்தில் ஜனாதிபதியையோ, பிரதமரையோ அல்லது அரசாங்கத்தின் அமைச்சர்களையோ இவர்களால் சந்திக்கக்கூட முடியாத நிலை காணப்படுகின்றது. 

இவர்களுக்கு இப்போதாவது வேலைவாய்ப்புகளைப் பெற்றுக் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். 

சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையின்படி, இடைநிலைக் கல்விக்குப் பிந்தைய கல்வி கற்ற 15-24 வயதுக்குட்பட்டவர்களில் அதிகளவான வேலையின்மை விகிதம் நமது நாட்டில்தான் காணப்படுகின்றது. அது 43 சதவீதமாகும். 

நாணய நிதியத்தின் இந்தத் தரவுகளை அறிந்திருந்தும் அரசாங்கத்திற்கு இது பற்றித் தெரியாமல் இருப்பது ஆச்சரியமான விடயமாக காணப்படுகின்றது. இது ஒரு பாரிய பேரழிவாகும். 

இனியாவது இந்த மோசமான அரசியலிலிருந்து விலகி பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்குமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!