வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சியில் முக்கிய கலந்துரையாடல்!
வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையிலான முக்கிய கலந்துரையாடல் இன்று (22) காலை நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
இதன்போது, குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் மக்கள் எதிர்நோக்கும் சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
மேலும், பிராந்திய ரீதியாக மக்கள் எதிர்கொள்ளும் வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் அனைத்து பிரதேச மக்களின் பிரச்சினைகளையும் நாடாளுமன்றத்தில் எதிரொலிக்கச் செய்வது மற்றும் அவற்றுக்கான தீர்வுகளை முன்வைப்பது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.