உயர்கல்வி பெற்ற இலங்கை இளைஞர்களிடையே வேலையின்மை அதிகரிப்பு – IMF அறிக்கை
#SriLanka
#IMF
#report
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
3 hours ago
இலங்கையில் உயர் கல்வித் தகுதிகளைக் கொண்ட 15 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் வேலையின்மை விகிதம் சுமார் 43% ஆக இருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்த விகிதம் இலங்கையில் அதிகமாக உள்ளதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
உயர்கல்வியை நிறைவு செய்த பின்னரும் வேலைவாய்ப்பைப் பெற முடியாத இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலைக்குரிய நிலையாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உலகளவில் உயர்கல்வித் தகுதிகளுடன் சுமார் 1.2 பில்லியன் இளைஞர்கள் வேலைவாய்ப்புச் சந்தையில் நுழையும் நிலையில், சுமார் 500 மில்லியன் புதிய வேலைவாய்ப்புகளே உருவாகும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் IMF அறிக்கை குறிப்பிடுகிறது.