மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சவுதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கி
சவுதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் ஆகஸ்ட் 2026ம் ஆண்டு மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் கையெழுத்திட்டது.
இந்த ஒப்பந்தத்தின்படி, அந்நிய நாடுகள் ஏதாவது ஒரு உறுப்பு நாட்டின் மீது தாக்குதல் நடத்தும் போது, மற்ற உறுப்பு நாடுகள் தாக்குதல் நடத்தும் வகையில் ஒப்பந்தம் போடப்பட்டது.
இதையடுத்து ஏமன் நாட்டில் முக்கிய நகரங்களை கைப்பற்றும் நோக்கில் ஹவுதிகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஏமனுக்கு ஆதரவாக சவுதி அரேபியா தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனால் சவுதி அரேபியா மீது ஹவுதி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் மூத்த ஹவுதி அதிகாரி முகமது அல்-புகைதி பாகிஸ்தான் மற்றும் துருக்கி நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், பாகிஸ்தான் மற்றும் துருக்கி மேற்கொள்ளும் நேரடி ராணுவ தலையீடு, கடுமையான ராணுவ நடவடிக்கைக்கு வழிவகுக்கும் என எச்சரித்தார்.