கிளிநொச்சியின் பசுமை பூங்காவில் மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ள புத்தகத் திருவிழா

#SriLanka #Kilinochchi #LANKA4 #books #Exhibition #L4
Prasu
2 hours ago
கிளிநொச்சியின் பசுமை பூங்காவில் மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ள புத்தகத் திருவிழா

கிளிநொச்சியின் பசுமை பூங்காவில் இன்று முதல் எதிர்வரும் சனிக்கிழமை மாலை 8 மணி வரை புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளது.

கரைச்சி பிரதேச சபையின் ஏற்பாட்டில் எமது பகுதியின் படைப்பாளிகள் கலைஞர்கள் ஆர்வலர்கள் இணைந்து மேற்கொள்ளும் இந்த புத்தகக் கண்காட்சியில் 6000 மேற்பட்ட பெறுமதி வாய்ந்த புத்தகங்கள் கண்காட்சிக்கு வைக்கப்படுவதுடன் தனியார் புத்தகசாலைகளின் விற்பனைக்கூடங்களும் திறக்கப்பட்டு இருக்கும்.

பகல் வேலைகளில் பாடசாலை மாணவர்கள் கல்வி சமூகத்தினர் புத்தகத் திருவிழாவில் கலந்து கொள்ள வலய கல்வி பணிப்பாளர்களும் அதிபர்களும் அனுசரனை வழங்கி இருக்கிறார்கள்.

மாலை 4 மணி தொடக்கம் இரவு 8 மணி வரை பள்ளி பிள்ளைகளிடையே போட்டிகளும் சித்திரம் ஓவியம் நடனம் வாய்ப்பாடு ஆகிய கலை நிகழ்வுகளும் பங்கு கொள்கின்ற பிள்ளைகளுக்கு ஊக்குவிப்பு பரிசுகளும் வழங்கப்படுகிறது.

தனியார் கல்வி நிலையங்கள் மற்றும் வர்த்தக பெருமக்கள் பொது அமைப்புக்கள் சமூக ஆர்வலர்கள் அனைவரும் முழுமையான பங்களிப்பை வழங்குங்கள்.

மூன்று நாட்களும் மாலை வேலை உள்ளூர் படைப்பாளிகளின் படைப்புக்கள் அறிமுகம் செய்யப்பட்டு அதன் மீதான அறிமுக உரைகளும் காட்சிப்படுத்தப்படுகின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!