இலங்கை–அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து முக்கிய சந்திப்பு

#SriLanka #Meeting #America #LANKA4 #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
இலங்கை–அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து முக்கிய சந்திப்பு

இலங்கை பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜயசேகரவை சந்தித்த அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர், இரு நாடுகளுக்கும் இடையிலான வளர்ந்து வரும் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடியுள்ளார்.

இது இருவருக்கும் இடையிலான முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பு என இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு அமெரிக்கா அண்மையில் வழங்கிய பாதுகாப்பு உதவிகள், இலங்கை பாதுகாப்புப் படைகளின் தயார் நிலையை மேம்படுத்துதல் மற்றும் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், இந்து சமுத்திரம் மற்றும் இந்தோ–பசிபிக் பிராந்தியத்தில் இரு நாடுகளுக்கும் பொதுவான நலன்களை முன்னெடுப்பது மற்றும் ஏற்கனவே வழங்கப்பட்ட பாதுகாப்பு திறன்களை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் இரு தரப்பினரும் கலந்துரையாடியுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!