2029ம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் இலக்கு என்ன?
#Election
#Namal Rajapaksha
#LANKA4
#President
#AnuraKumaraDissanayake
#L4
Prasu
2 hours ago
மொட்டுக் கட்சியின் அனுராதபுர அரசியல் மேடையில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, 2029ம் ஆண்டு நாமல் ராஜபக்சவை ஜனாதிபதியாக்குவதே தனது இலக்கு எனத் தெரிவித்துள்ளார்.
“எனக்கு தமிழீழம் வேண்டாம். 2029ம் ஆண்டு நாமலை ஜனாதிபதியாக்கிவிட்டுத்தான் எனது அரசியல் பயணம் ஓயும்” என அவர் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
மொட்டுக் கட்சி மேடையில் அவர் வெளியிட்ட இந்த அரசியல் நிலைப்பாடு தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
தமிழீழக் கோரிக்கையையும், தமிழ் மக்களின் அரசியல் எதிர்பார்ப்புகளையும் முன்னிறுத்தி அரசியலில் ஈடுபடும் ஒருவர், தற்போது தென்னிலங்கை அரசியல் கட்சியின் மேடையில் இவ்வாறான கருத்தை வெளியிட்டிருப்பது குறித்து பல்வேறு விமர்சனங்களும் கேள்விகளும் எழுந்துள்ளன.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே