லண்டனில் நீண்ட நாள் நண்பர் அஜித்தை சந்தித்த தமிழக முதல்வர் விஜய்
தமிழகத்துக்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 6 நாள் அரசுமுறை பயணமாக முதலமைச்சர் விஜய் லண்டன் சென்று உள்ளார்.
விமான நிலை யத்தில் காத்திருந்த பிரிட்டன் தமிழ் சங்க தலைவர் ஜேக்கப் ரவிபாலன், த.வெ.க. துரை கண்ணன் மற்றும் இங்கிலாந்து வாழ் தமிழர்கள் அவருக்கு பூங்கொத்துகள் வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தமிழகத்தில் புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதும், உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுமே விஜய்யின் பிரிட்டன் பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.
பிரிட்டன் பயணத்தின் முக்கிய நிகழ்வாக, இன்று புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தயத்திடல் மிச்செலின் லீ மான்ஸ் கோப்பை கார் பந்தயத்தை அவர் பச்சைக்கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார்.
இந்தப் போட்டியில் நடிகர் அஜித்குமார் பங்கேற்கிறார். அவருடன் இந்தியாவைச் சேர்ந்த முன்னணி கார் பந்தய வீரர்களும் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில், பந்தயத்திற்கு முன்னதாக தனது நீண்டநாள் நண்பர் அஜித்குமாரை முதலமைச்சர் சந்தித்துள்ளார்.
அஜித்தை ஆரத்தழுவி கார் பந்தயத்தில் வெற்றி பெற தன்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
முதலமைச்சர் மற்றும் நடிகர் அஜித்குமார் ஒன்றாக இணைந்து ரசிகர்களை நோக்கி கையசைத்தனர்.
இதனைக் கண்ட இங்திலாந்து வாழ் தமிழர்கள் மற்றும் ரசிகர்கள் பெரும் உற்சாகம் அடைந்தனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே