37ஆவது சரசவிய சினிமா விருது விழா கோலாகலமாக நடைபெற்றது!
இலங்கைச் சினிமாவின் சிறப்புமிக்க கலை விழாவாகக் கருதப்படும் 37ஆவது சரசவிய சினிமா விருது விழா, செப்டெம்பர் 09ஆம் திகதி கொழும்பு நெலும் பொக்குண கலையரங்கில் சிறப்பாக நடைபெற்றது.
லேக்ஹவுஸ் நிறுவனத்தின் ‘சரசவிய’ பத்திரிகையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விருது விழா, “இளைஞர் சினிமாவின் விடியல்” என்ற தொனிப்பொருளில் நடைபெற்றது.
இலங்கை சினிமாவின் கலைஞர்கள், இயக்குநர்கள் மற்றும் திரைத்துறையுடன் தொடர்புடைய பலரும் கலந்துகொண்ட இந்த விழாவில், சிறந்த திரைப்படப் படைப்புகள் மற்றும் திரைத்துறைச் சாதனைகள் கௌரவிக்கப்பட்டன.
குறிப்பாக, 2025ஆம் ஆண்டில் 13 புதிய இயக்குநர்கள் சிங்களச் சினிமாவில் தடம் பதித்தமை இவ்விழாவின் போது விசேடமாகச் சுட்டிக்காட்டப்பட்டது.
இலங்கை சினிமாவின் புதிய தலைமுறையினரின் வருகையையும், அவர்களின் படைப்பாற்றலையும் முன்னிலைப்படுத்தும் வகையில் இந்த ஆண்டு சரசவிய விருது விழா அமைந்திருந்தது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே