பாகிஸ்தானை வீழ்த்தி மகளிர் ஆசிய கிண்ண இறுதி போட்டிக்குள் நுழைந்த இலங்கை அணி
10வது மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் துபாயில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் நடந்த முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா அணி வங்கதேச அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
இந்நிலையில், இன்று நடந்த இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணியை வீழ்த்தி இலங்கை மகளிர் அணி இறுதிப் போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளது.
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை மகளிர் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 130 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் மகளிர் அணி சார்பில், பாத்திமா சனா ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக 47 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
அதனை தொடர்ந்து, வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 18.4 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இலங்கை மகளிர் அணி சார்பில், ஹர்ஷிதா 36 ஓட்டங்களும் கவிஷா 33 ஓட்டங்களும் குவித்தனர்.
இதற்கமைய இந்த தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய மகளிர் அணியும், இலங்கை மகளிர் அணியும் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே