அமெரிக்காவில் பல்கலைக்கழகத்திற்கு $20 மில்லியனை நன்கொடையாக வழங்கிய இந்திய தம்பதி
அமெரிக்காவின் வடக்கு டெக்சாஸ் பல்கலைக்கழகத்திற்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த பொறியாளர் தம்பதியினர் 20 மில்லியன் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
பிராட்காம் நிறுவனத்தின் துணைத் தலைவரான விகாஸ் சின்ஹா மற்றும் அனுராதா சின்ஹா தம்பதியினர் வழங்கிய நிதியுதவியை கொண்டு, அங்கு புதிய செயற்கை நுண்ணறிவு மற்றும் மேம்பட்ட பகுப்பாய்வுக் கல்லூரி நிறுவப்படவுள்ளது.
மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் புதிய வாய்ப்புகளை வழங்கும் இந்த கல்லூரிக்கு 'அனுராதா மற்றும் விகாஸ் சின்ஹா செயற்கை நுண்ணறிவு மற்றும் மேம்பட்ட பகுப்பாய்வு கல்லூரி' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தின் தலைவர் ஹாரிசன் கெல்லர் இவர்களின் உன்னத சேவையை பாராட்டியுள்ளார். தொழில்நுட்பங்களை உருவாக்குவதிலும் பயன்படுத்துவதிலும் இக்கொடை புதிய பாதையை அமைக்கும் என அவர் தெரிவித்தார்.
மேலும், இப்புதிய கல்லூரியானது செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல், சைபர் பாதுகாப்பு, சுகாதார இன்ஃபர்மேடிக்ஸ் மற்றும் மேம்பட்ட பகுப்பாய்வுத் துறைகளை இணைக்கும் ஒரு முக்கிய கல்வி மற்றும் ஆராய்ச்சி மையமாக செயல்படும்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே