ஒன்ராறியோவின் செயற்கை நுண்ணறிவு இணை அமைச்சராக விஜய் தணிகாசலம் நியமனம்
சமீபத்திய அமைச்சரவை மாற்றத்தில், ஒன்ராறியோ முதல்வர் மாண்புமிகு டக் ஃபோர்டு, அமைச்சர் விஜய் தணிகாசலம் அவர்களை முதன்முறையாக செயற்கை நுண்ணறிவும் அதனை ஏற்றுக்கொள்ளுதலுக்குமான இணை அமைச்சராக நியமித்துள்ளார்.
இது பொது சேவைக்கான அவரது அர்ப்பணிப்புக்கும் மாநிலத்தின் முன்னேற்றத்திற்கான அவரது பங்களிப்க்கும் கொடுக்கப்பட்ட அங்கீகரமாகும்.
இந்தப் புதிய அமைச்சகம், தொழில்நுட்பமும் செயற்கை நுண்ணறிவும் எவ்வளவு வேகமாக வளர்ந்து வருகின்றன என்பதையும், நமது பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், எதிர்கால சிறந்த வாய்ப்புகளுக்குத் தயாராகவும் ஒன்ராறியோவுக்கு அர்ப்பணிப்புடன் செயற்படும் தலைவர்கள் தேவை என்பதையும் எடுத்துக்காட்டுகிறது.
அமைச்சர் விஜய் தணிகாசலம் 2018ம் ஆண்டில் இருந்து மூன்றாவது முறையாக ஸ்கார்பரோ-ரூஜ் பார்க் தொகுதியின் ஒன்ராறியோ சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றி வருவதுடன், மேலும் 2023ம் ஆண்டில் ஒன்ராறியோவில் அமைச்சரவைப் பதவியை வகித்த முதல் தமிழ் அரசியல்வாதி என்ற வரலாற்றையும் படைத்தார்.
உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவரின் வான்புகழ் திருக்குறளின் மீது மீண்டும் ஒருமுறை பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் மூலம் அவர், தனது தமிழ் மரபுடனான அவரின் ஆழமான தொடர்பையும் வெளிப்படுத்தியிருந்தார்.
அவர் முன்னதாக 2023ம் ஆண்டில் போக்குவரத்துக்கான இணை அமைச்சராகவும், 2024ம் ஆண்டில் வீட்டுவசதிக்கான இணை அமைச்சராகவும், சமீபத்தில் சுகதாரா இணை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே