உலகின் மிக வெப்பமான மாதமாக ஆகஸ்ட் மாதம் பதிவு

#Death #LANKA4 #heat #Climate #World #L4
Prasu
1 hour ago
உலகின் மிக வெப்பமான மாதமாக ஆகஸ்ட் மாதம் பதிவு

ஐரோப்பிய ஒன்றியத்தின் கோபர்நிகஸ் காலநிலை மாற்ற சேவை (C3S) மையம் வெளியிட்ட தகவலின்படி, ஆகஸ்ட் மாதத்தில் பூமியின் சராசரி உலகளாவிய வெப்பநிலையானது தொழில்துறைக்கு முந்தைய கால கட்டத்தை விட 1.5°C அதிகரித்துள்ளது.

கடந்த மாதத்தில் உலகெங்கிலும் கடுமையான காலநிலை மாற்றங்களும் பேரழிவுகளும் பதிவாகின. 

நேபாளம் மற்றும் சீனாவின் திபெத் பிராந்தியத்தில் நூற்றுக்கணக்கான உயிர்களைப் பலிவாங்கிய நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளப் பெருக்குக்கு காலநிலை மாற்றமே காரணம் என விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும், இந்தோனேசியா முதல் கிரீஸ் மற்றும் பெல்ஜியம் வரை காட்டுத்தீ பரவியதுடன், ஹங்கேரி மற்றும் ருமேனியா ஆகிய நாடுகள் கடுமையான வறட்சியை எதிர்கொண்டுள்ளன.

2025 நவம்பர் மாதத்திற்குப் பிறகு, உலகின் சராசரி வெப்பநிலை தொழில்துறைக்கு முந்தைய கால அளவை விட 1.5 டிகிரி செல்சியஸைத் தாண்டிய முதல் மாதமாக ஓகஸ்ட் மாதம் அமைந்துள்ளது.

உலகளாவிய மேற்பரப்பு காற்று வெப்பநிலை 16.96 டிகிரி செல்சியஸாகப் பதிவாகி, கடந்த மாதமானது 2023 ஜூலை மாதத்துடன் இணைந்து வரலாற்றில் உலகின் மிக வெப்பமான மாதமாகச் சமநிலையைப் பெற்றுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4